நீட் தேர்வு விலக்கு: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று (ஏப்., 09) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
Tags : நீட் தேர்வு விலக்கு: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்



















