பெண்களின் சபரிமலையானமண்டைக்காடுபகவதியம்மன்கோவிலில் இருமுடிகட்டிவந்து வழிப்பாடு.

by Editor / 10-03-2024 12:24:55pm
 பெண்களின் சபரிமலையானமண்டைக்காடுபகவதியம்மன்கோவிலில் இருமுடிகட்டிவந்து வழிப்பாடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில்  பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக  நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின்  மாசி பெருந்திருவிழா கடந்த 3 ம் தேதி   காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87 வது சமய மாநாடு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 6  ம் நாள் கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய வழிபாடான வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 8 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர் பொங்கலிடும் பகுதியில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். சிலர் அருகில் உள்ள தோப்புக்களில் குடும்பம்குடும்பமாக , நண்பர்கள் என குவிந்து சமையல் மற்றும் பொங்கலிட்டனர். இதனால் கோயில் வளாகம், கடற்கரை, பொங்கலிடும் பகுதி மற்றும் கோயிலை சுற்றி 4 வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 

Tags : பெண்களின் சபரிமலையானமண்டைக்காடுபகவதியம்மன்கோவிலில் இருமுடிகட்டிவந்து வழிப்பாடு.

Share via