சேலம் சாலை விபத்து- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 12-06-2024 05:15:57pm
சேலம் சாலை விபத்து- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சேலம் மாவட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 இலட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சமும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via