சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை13 குழுக்கள் விரைவு.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து தலா 30 பேர் அடங்கிய 390 பேர் அடங்கிய 13 குழுக்கள் பாண்டிச்சேரி-2 குழுக்கள், திருவள்ளூர்-2 குழுக்கள், சென்னை, தாம்பரம், ஆவடி, மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 13 குழுக்கள் விரைவு. மேலும் 2 மோப்ப நாய்களும் மீட்பு பணிக்கு புறப்பட்டு சென்றனர்.
Tags : சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை13 குழுக்கள் விரைவு.