பாமக மோதல்.. பின்னணியில் பாஜக? நயினார் நாகேந்திரன் பதில்

பாமக உட்கட்சி பிரச்சனைக்கும் பாஜக விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதலுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை" என்று தெரிவித்துள்ளார்.
Tags :