திரிபுராவில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

by Staff / 21-01-2023 11:53:56am
திரிபுராவில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

திரிபுரா மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிபுராவில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 30ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முறையான வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்பு வரை, 1993ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சியின், தசரத் டெபர்மா மற்றும் மாணிக் சர்க்கார் ஆகியோர் முதல்வராக இருந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo