இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செயல்பட்டு வரும் அரசு காப்பகத்தில் நேற்று கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த மிராக்கல் ஏஜ் சர்ச் சார்பாக காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவும் உடையும் வழங்கப்பட்டதாகவும் அப்பொழுது இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணன் அவரது ஆதரவாளர்கள் இருவருடன் வந்து இங்கு கிருத்துவ மதத்தை பரப்புகிறீர்களா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக காப்பகத்தின் பணியாளர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆன வேதரங்கன், பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் செய்யாறு போலீசார்.
Tags : இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் கைது.