சென்னையில் பரவலாக மழை மக்கள் மகிழ்ச்சி.
சென்னையில் சில இடங்களில் பெய்துவரும் மழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 10.8 சென்டிமீட்டர் மழை பதிவுஆகியுள்ளது. அதே போல் செங்குன்றம் 6 செ.மீட்டர் சோழவரம் திருவள்ளூர் 5 செ மீ. தாமரைப்பாக்கம் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 4 செ மீ. ஆர்கே பேட்டை பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று சென்டிமீட்டர் என அதிகபட்சமாக ஆவடியில் 10.8 சென்டிமீட்டர் மழை பதிவு ஆகியுள்ளது.இந்தநிலையில் புழல் ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2162 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு தற்போது 429 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது சென்னை குடிநீருக்காக 221 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது.
Tags : சென்னையில் பரவலாக மழை மக்கள் மகிழ்ச்சி.