தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!

by Editor / 19-06-2021 07:41:37am
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தக் குழு கலைப்பு!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா?, என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பின்படி, எந்த அனுமதியும் இன்றி, அணைக் கட்டப்படுவதால், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி நீருக்குள் மூழ்கவும், வனவிலங்கு சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, வெளியான செய்திகளை தொடர்ந்து, தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. மேகதாதுவில் அணைக்கட்டப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் குழு ஒன்றையும் அமைத்தது.

இதற்கிடையே, கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு கலைக்கப்படுவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதனிடைய, பெங்கரூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அரசின் அனுமதி கிடைதத்ததும் மேகதாட்டுவில் அணை கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via