விபத்தில் பள்ளி மாணவன் பலி
கரூர் சின்ன தாராபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம்வகுப்பு படித்து வந்த சின்னபுளியம்பட்டி முருகேசன் மகன் உவேந்திரன் வயது 15 என்பவர் நேற்று மாலை சுமார் 4: 30 மணியளவில் சைக்கிள் வாகனத்தில் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த பொழுது பின்னே வந்த அசோக் லைலாண்ட் ஈச்சர் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்கு குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து பிரதேத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
Tags :



















