அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, நத்தமேடு, பழனிவேல்புரம், ராமச்சந்திரபுரம், மணக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 மற்றும் 7 ம் வகுப்பு படிக்கும் 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோர் விசாரிக்கையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் நாட்டுக்காயை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை சிகிச்சைக்காக பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை சேர்த்தனர்.இத்தகவல் நத்தமேடு சுற்றுவட்டாரத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 20 மாணவியர் மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 21பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மாணவிகளை அனுப்பி வைத்தனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :


















