ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஐ.நா

by Staff / 16-10-2023 04:51:27pm
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஐ.நா

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த களேபரமான நிகழ்வுகளுக்கு மத்தியில், நான் இரண்டு மனிதாபிமான வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன். பணயக்கைதிகளை நிபந்தனையின்றி ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். "அதே நேரத்தில், காசா மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் எந்த தடையும் இல்லாமல் சென்றடைவதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories