தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழை-திணறும் மின்வாரியம்.

by Editor / 30-05-2025 09:49:58am
தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழை-திணறும் மின்வாரியம்.

தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை  கொட்டிவருவதால்  தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இன்னும் குறையவில்லை. இதனால் இன்று 6வது நாளாக அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 ஆம் தேதி முதல் மின்சாரமில்லாமல் பல்வேறுபகுதிகளில்  மக்கள் தவித்துவருகின்றனர்.மின்சாரவாரியம் போதிய பணியாளர்கள் இல்லாமல் மின்சாரவிநியோகத்தை சீரமைக்க முடியாமல் திணறிவருகிறது.
 

 

Tags : தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழை-திணறும் மின்வாரியம்.

Share via