தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். இதனை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். அப்போது, எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் வாசிக்கத் தொடங்கியுள்ளார்.
102 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.675 கோடியில் மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் சீரான குடிநீர் விநியோகித்திட முதன்மை சுற்றுக் குழாய் திட்டத்திற்காக ரூ.2,423 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..
அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலி பொதுமக்கள் போட்டி தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டு குழு வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் சுமார் 6,100 கி.மீக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும். இற்காக ரூ.2020 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.88 கோடியில் 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு. மேலும் திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ரூ.400 கோடியில் நதிக்கரை மேம்பாடு திட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு.
மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது. ஆனாலும் மாணவர்களின் நலன் கருதி திட்டங்களுக்கான நிதியை மாநில அரசே சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது. ரூ.2000 கோடி நிதியை இழந்து நெருக்கடியான இந்த சூழலிலும் இருமொழிக் கொள்கையை விட்டுத்தர மாட்டோம் என கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ்நாட்டின் தன்மானம் காத்த முதல்வரின் பின்னால் தமிழ்நாடு முழுவதும் அணிவகுத்துள்ளது.
சென்னை சேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை ரூ.110 கோடியில் 3 கி.மீக்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிப்பு. இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,500 டன் திடக்கழிவில் இருந்து நாளொன்றுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் மற்றும் சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கி கடன் வழங்கப்படும்.
Tags : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.