சித்திரை வெயில்காலத்தில் நாம் அணிய வேண்டிய உடைகள் -உணவுகள் .

by Admin / 30-04-2023 12:25:10pm
சித்திரை வெயில்காலத்தில் நாம் அணிய வேண்டிய உடைகள் -உணவுகள் .

சித்திரை வெயில் காலம் தொடங்கி விட்டது.நாம் ,இப்பொழுது நம் உடலையும் உடல் ஆரோக்கியத்தையும் பேண வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் .அதற்கு நாம் அணிய வேண்டிய உடைகள் எப்படி இருக்க வேண்டும். நாம் உண்ண வேண்டிய உணவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால். நாம் சாதாரண காட்டன் சட்டை, வேட்டி. பேண்ட் போன்றவற்றையும் அணிய வேண்டும்.. நைலான், பட்டு போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உள்ளாடைகளில் கூட காட்டன் நூலினால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணியுங்கள் .கூடுமானவரை, எலாஸ்டிக் பயன்படுத்தக்கூடிய ஆடைகளை குழந்தைகளாக இருந்தாலும் சரி இளைஞர்களாக இருந்தாலும் சரி முதியவர்களாக இருந்தாலும் சரி அணிவதை தவிருங்கள்..உங்கள்  ரத்த ஓட்டத்தை சீராக ஓட விடாமல் குடலிலே ஒர் அலர்ஜி தன்மையை ஏற்படுத்தி கொப்புளங்களை உருவாக்குவதோடு இந்த உஷ்ண காலகட்டத்தில் வெப்பத்தை அதிகரிக்க செய்து உலகின் உடைய காற்று நீர் போன்ற தன்மைகளை குறைத்து விடக் கூடியதாக மாறிவிடும். உடலில் இருந்து வியர்வை  வெளியேறினால் தான் ஆரோக்கியமாக நாம் இருக்க முடியும்.  வியர்வை வெளியேறாமல் இருக்கக்கூடிய உடைகளை அணிந்தால் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால், இந்த வெப்ப காலத்தில்கூடுமானவரை கவனமாக இருங்கள்.  பலர் கோட்டு சூட்டுகளை கூட அணிந்து கொள்கிறார்கள். வீட்டிலே ஏசி, காரிலேயே ஏசி, பணி புரியும் இடங்களில் ஏசி இருந்தால், இந்த கோட்டு சூட்டுகளை நாம் அணிந்து செல்லலாம். அது இல்லாத பட்சத்தில் நாம் இது போன்று கழுத்தை இறுக்கி பிடித்து உடல் சூட்டை அதிகப்படுத்தக்கூடிய ஆடைகளை அறவே அணியாமல் தவிர்த்து விடுவது நன்று. கூடுமானவரை காலில் ஷூ போடுகிறவர்கள் சாக்ஸாக பயன்படுத்தப்படுகிறவை காட்டனாக இருப்பது நன்று. பெண்கள் தங்களுடைய புடவையிலிருந்து தாங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே வெப்பம் வராமல் உடலை பாதுகாக்க கூடியதான ஆடைகளை அணிவது மிகச் சிறந்தது .அதனால் யோசித்து உடைகளை அணியுங்கள்.

உணவு பழக்கம்,

நம்மளுடைய உடல் வெப்பத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய உணவுகளை, உடனடியாக செரிக்கிற உணவுகளை உண்ண பாருங்கள் தயிர், மோர், பழ ரசங்கள் அருந்துவதும் அதிகமான நீரை பருகுவதும் இந்த நேரத்தில் அவசிய தேவை. அதனால், இட்லி- தோசை, சாதம் என்கிற நம்மளுடைய உணவு பழக்கத்தோடு எளிமையாக செரிக்கக்கக்கூடிய மாமிசங்களை நாம் சாப்பிடலாம். மீன் உணவை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.ஆனால் ,கோழி இறைச்சி, அதாவது சிக்கனை அதிகமாக பயன்படுத்துவதை தயவு செய்து இந்த வெயில் காலத்தில் தவிர்த்து விடுங்கள். வெப்பத்தை தணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்ற நாம் அதை அதிகப்படுத்தினால், ஆரோக்கிய கேடு தானாக வந்து நம் உடம்பில் ஒட்டிக் கொள்ளும். ஆனால், எதையெல்லாம் சாப்பிட்டால் உடல் சீதோசன நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமோ அதை மட்டும் உண்ணுவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். நம்மளுடைய உணவு பழக்கமே எளிமையான உணவில் இருந்து தான் நம் முன்னோர்கள் எல்லாம் தயார் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அதிகமான உப்பு, காரம்,எண்ணெய்  கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய உணவுகளை சாதாரணமாக சாப்பிடலாம். பழங்களை, பழ ரசங்களை, நுங்கு, இளநீர்பதனீர்,கருப்புகட்டி புளி கலந்த பானகம்  மோரை அதிகமாக பருகுங்கள்.  தினமும் காலையில் கொஞ்சமாவது தலையில் ,உச்சந்தலையில் எண்ணெய் வைத்து நன்றாக இறுகதேய்த்து குளியுங்கள். கூடுமானவரை புதன்கிழமை- ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளித்தால், இந்த உடலில் வெப்பத்தை நாம் விரட்டி விடலாம். கொஞ்சம்,நம் மீது நாம் அக்கறை எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். காலச்சூழல்கள் மாற மாற  உடலும் பலகினமடைந்துகொண்டிருக்கிறது. அதனால், பாதுகாப்பான ஒரு வாழ்க்கையில் ,ஒர் அமைதியான,- ஒர் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை நம் வாழ வேண்டும் என்றால் சில விஷயங்களில்நாம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சித்திரை வெயில்காலத்தில் நாம் அணிய வேண்டிய உடைகள் -உணவுகள் .
 

Tags :

Share via