இலங்கைக்கு கடத்த முயற்சி..? 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய். கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர்.

திசையன்விளை அருகே உள்ள உவரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடியில் உவரி கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நடேசன், தலைமை காவலர்கள் முருகன், பாலமுருகன், ரவிச்சந்திரன் , முதல் நிலை காவலர்கள் தங்க ஜினோ,ஜான்சன் அலிகான் ஆகியோர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகப் படும்படியாக தார்ப்பாய் போட்டு மூடி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் சட்ட விரோதமாக எந்த வித விதமான ஆவணங்கள் இல்லாமல் 63 கேன் களில் மொத்தம் 2000 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய வற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (வயது 36), சரவணன் (வயது30)ஆகியோரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஆகும்.கைப்பற்றபட்டவை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த மண்ணெண்ணெய் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
Tags : இலங்கைக்கு கடத்த முயற்சி: 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய். கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர்.