550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப் 6 அன்று திறந்து வைக்கிறார்.

by Editor / 26-03-2025 11:44:58pm
 550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப் 6 அன்று திறந்து வைக்கிறார்.

  
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

100 சதவீதம் நிறைவடைந்த பாலம் கட்டுமான பணியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 6 ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :  550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப் 6 அன்று திறந்து வைக்கிறார்.

Share via