செந்தில் பாலாஜி சகோதரர் கொச்சியில் கைது

by Staff / 13-08-2023 03:10:20pm
செந்தில் பாலாஜி சகோதரர் கொச்சியில் கைது

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்காத்துறை அதிகாரிகள் கொச்சியில் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அசோக் குமாரை கேரளாவின் கொச்சியில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியை கடந்த 5 நாட்களாக காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories