ஹெராயின் பறிமுதல் கடத்தல்காரர்கள் கைது

இந்திய எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஆயிரத்து 526 கோடி ரூபாய் மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 2 படகுகளை லட்சத்தீவு அகட்டி கடற்கரை பகுதியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.தொடந்து படகுகளை சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து 526 கோடி ரூபாய் மதிப்பிலான 218 கிலோ ஹெராயின் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :