கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொன்ற காவல்துறை அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை

by Editor / 08-07-2022 03:22:59pm
கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொன்ற காவல்துறை அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை நெறித்து கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் சாதி, மத பிரச்னை என்றால், அமெரிக்காவில் இனப்பிரச்னை அவ்வப்போது தலைவிரித்தாடும். அப்படி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் கழுத்தை, காலால் நெறித்து கொலை செய்ததன் வீடியோ இணையத்தில் பரவி, உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. அங்கு சென்று கொண்டிருந்த கருப்பினத்தவரை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவரை மடக்கி  பிடித்த டெரிக் சவுவின் என்ற அதிகாரி, ஜார்ஜை கீழே தள்ளி அவரது ஷூ காலால் மிதித்ததுடன், தனது முழங்காலால் அவரது கழுத்தை சுமார் 9 நிமிடங்கள் நெறித்து அழுத்தினார். இதில் ஜார்ஜ் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதிலும் இருந்து ஜார்ஜ்க்கு ஆதரவாக குரல்கள் எழுந்தது. 

மேலும் 21 ஆண்டுகள் சிறை..இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான காவல்துறை அதிகாரி டெரிக் சவுவ்விற்கு 22 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்த நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் பொது உரிமைகளை பாதுகாக்க தவறியதோடு, அதனை மீறியதாக டெரிக் சவுவினுக்கு எதிராக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் டெரிக்குக்கு சுமார் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via