குரு பெயா்ச்சி - ரிஷபம்.

ரிஷபராசிக்கு ஒன்பதாம் வீடான மகரத்தில் சஞ்சரித்த குரு பகவான் 13.11.2021 அன்று பத்தாம் வீடான கும்பத்திற்கு வருகிறார்.பத்தாம் இடம் என்பது ஜீவனம்,ராஜ்யம்,கர்மம் போன்ற ஸ்தானத்தை குறிக்கும்.இந்த இடம் தான் ஒருவரின் தொழில்,வேலை,பட்டம்,பதவி,புகழ் செல்வாக்கு முதலியவற்றை வழங்க கூடிய இடமாகும்.பொதுவாக,குரு பார்க்கும் இடம்தான் சிப்பே தவிர இருக்கும் இடமல்ல. அதனால்,பத்தாம் இடத்திலிருக்கும் குரு இந்த ராசிக்கு தொழிலில் தடை,வேலை மாற்றம்,உயர் அதிகாரிகளுடன் வீண் சச்சரவு,வருமான குறைவு,பாபுதிய, முயற்சியில் தடை ,பணப்பற்றாக்குறையால் பொன் பொருளை விற்கும் நிலை வரும்.அலைச்சல்,எதிலும் விரக்தி ,கோபம்,தடுமாற்றம் உருவாகும்.உடன் பிறப்புகளுடன் மனக்கசப்பு தோன்றும்.என்ன வாழ்க்கை என்கிற சலிப்பு உருவாகும். இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியில் மட்டுமே .குரு,5,7,9 பார்வையில்4,6,8.பார்வையாக உங்கள் வீட்டில் பார்வை யை செலுத்த உள்ளதால்,பணம்,மதிப்பு,மரியாதை உருவாகும்.மண வாழ்கை அமையும்.நிம்மதி கிடைக்கும்.பிரிந்தவர் ஒன்று சேரும் நிலை வரும்.
Tags :