அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக? பிரேமலதா பளீச்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, "அடுத்த 6 மாதங்களுக்கு தேமுதிகவை வலுப்படுத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். எந்த கூட்டணி, யார் கூட்டணிக்குச் செல்கிறோம் என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக நிதானமாக யோசித்து தேமுதிக முடிவு எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :