இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்துப் போட்யிடும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 'இந்தியா' கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் தனித்துப் போட்டியிடுவதாக அவர் அறிவித்தார். தேசிய மாநாட்டுக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 'இந்தியா' கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
Tags :