பல் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் கைரேகை வருகை பதிவேடு முறையாக பராமரிக்கவில்லை, சிசிடிவி கேமரா செயல்பாடுகள் சரியில்லை என சுட்டிக் காட்டிய குறைகளுக்கு உரிய பதில்கள் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. 50 மாணவர்கள் சேர்க்கையுடன் இந்தாண்டு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Tags :