ரூ. 4. 16 லட்சம் கஞ்சா கடத்தியோர் சிக்கினர்

by Staff / 21-09-2023 04:40:47pm
ரூ. 4. 16 லட்சம் கஞ்சா கடத்தியோர் சிக்கினர்

தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் சுற்றித் திரிந்தனர். தாம்பரம் மதுவிலக்கு போலீசார் அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், ஒடிசா மாநிலம், கஞ்சம் பகுதியை சேர்ந்த உத்தம் குமார் பிஷாய், 24, ததுதக்கா, 24, என தெரிந்தது. இருவரும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர். அவர்களது உடைமைகளை பரிசோதனை செய்ததில், 4. 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories