முதலிரவு அறையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 21-09-2023 04:45:34pm
முதலிரவு அறையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

முதலிரவு அறையில் மாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை ஓச்சேரியை சேர்ந்த சரவணன், ராஜராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து, செப்டம்பர் 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நேற்றைய தினம் முதலிரவு நடந்த நிலையில், காலையில் ராஜராஜேஸ்வரி எழுந்த போது, அதே அறையில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்து மனைவி அதிர்ந்தார். காதலித்த பெண்ணையே திருமணம் முடித்த நிலையிலும் அவர் ஏன் இப்படி செய்தார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories