காலை உணவு திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

by Admin / 25-08-2023 02:55:16pm
காலை உணவு திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம் -மாணவர்கள் கல்வித்திறன், பள்ளிக்கு வருகை அதிகரிப்பு, பெற்றோர்களின் பணி சுமை, குறைவு இத்திட்டத்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி 

 

 

தமிழக முழுவதும் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது .

இதனை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இன்று காலை துவக்கி வைத்தார்

இதனை தொடந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் தொடங்கி வைத்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பின்னர் அவர்களுடன் உணவு அருந்தினார் 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 2 கட்டமாக முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைக்க பட்டு உள்ளது கடந்த ஆண்டு 15.09.2022 முதற்கட்டமாக 1545 பள்ளிகளில் 1,14,000 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தினை தொடங்கி வைத்தனர் .. 

இத்திட்டத்தால் மாணவர்கள் கல்வித்திறன்,மாணவர்கள் பள்ளிக்கு வருகை அதிகரிப்பு, பெற்றோர்களின் பணி சுமை, மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு கிடைக்கிறது எதனால் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சுழல் உருவாகியுள்ளது

இத்திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து  ஆதிதிராவிடர் நலப் பள்ளி பிற்படுத்தப்பட்டோர் பள்ளி நகராட்சி பள்ளிகள் ஒன்றிய பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 589 தொடக்கப் பள்ளிகளில் 20962 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 31,008 பள்ளிகளில் 15,45,000 பயன் பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்...

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முதல்வர் முயற்சி மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.

 

காலை உணவு திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via