குஜராத்தின் அடுத்த முதல்வர்

by Editor / 11-09-2021 07:28:26pm
குஜராத்தின் அடுத்த முதல்வர்

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் விஜய் ரூபானியை மத்திய பாஜ., அரசு ராஜினாமா செய்யக் கோரியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் பதவிக்கு மத்திய பாஜ., அரசு யாரை தேர்ந்தெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆனந்திபென் படேல் குஜராத் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து நிதின் பாடேல் குஜராத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். அடுத்த மாநில சட்டமன்ற தேர்தலில் இவர் முதல்வராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக குஜராத் அரசியல் வட்டாரத்தில் அப்போது பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் ரூபானி பதவி விலகியதை அடுத்து நிதின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo