ஆளுநரை திருப்பப் பெறுக... திருமாவளவன்

by Editor / 11-09-2021 07:30:18pm
ஆளுநரை திருப்பப் பெறுக... திருமாவளவன்

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தங்களைத் தமிழ்நாடு வரவேற்கிறது' என அவரது வாழ்த்தைச் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது பாஜகவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், 'சீரிய முயற்சியால் நாகாலாந்து அமைதி நிலவச் செய்து உங்கள் சாதனை மகுடத்தில் மணிக்கல்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ''தமிழ்நாடு ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டிருப்பவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via