திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது - முதல்வர்

by Staff / 10-08-2023 04:38:52pm
திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது - முதல்வர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகத்துடன் இணைந்து பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாட வேண்டும். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் திமுக மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்” எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo