சரியாக படிக்காத மகன்களை கொன்றும் தந்தையும் தற்கொலை

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு யுகேஜி மற்றும் 1 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஹோலி பண்டிகை அன்று இரண்டு மகன்களும் சரியாக படிக்கவில்லை, போட்டிகள் நிறைந்த இந்த உலகில் அவர்கள் வாழ முடியாது எனக்கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகன்களை நீரில் முக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடல்களை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :