பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 29-03-2025 02:06:13pm
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் கடந்த 13.03.25 அன்று  8 வது மற்றும் 6 வது வகுப்பு படிக்கும் இரு பள்ளி மாணவிகள்   வீட்டை விட்டு சென்றனர். இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர்  உத்தரவுப்படி  மாவட்ட காவல்துறையினர் இரு பள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர் . 100 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆய்வு செய்து, தொழில் நுட்ப உதவியுடன் போலீசார் இருபள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்டனர் 
 இரு பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தில் ஈடுபட்ட  சம்பவத்தில்  தக்கலை இலப்பகோணம் பகுதியை சார்ந்த ராஜன் என்பவர் மகன் அஜித்குமார் என்ற வழக்கறிஞர் போக்சோசட்டத்தில்   கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் போக்சோ குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின்   உத்தரவிட்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரையின்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்  அழகுமீனா  குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

Tags : பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது.

Share via

More stories

Logo