தொண்டையில் சிக்கிய காசு.. காப்பாற்றிய இளைஞர்

by Staff / 14-09-2023 12:20:00pm
தொண்டையில் சிக்கிய காசு.. காப்பாற்றிய இளைஞர்

துருக்கியின் தியார்பாகிர் நகரில், தொண்டையில் சில்லரைக் காசு சிக்கியதால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த ஒருவர் ஹெய்ம்லிச் என்ற முறை மூலம் சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குழந்தையை காப்பாற்றிய வாலிபரை பாராட்டி வருகின்றனர். மேலும், பதற்றமடையாமல் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் சிறிய விபத்துக்கள் மற்றும் சிரமங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via