தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றமா

by Staff / 09-05-2023 05:24:13pm
தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றமா திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் ஆட்சி பொறுப்பேற்றபோது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சர்ச்சையால் அவரிடம் இருந்த போக்குவரத்து சிவசங்கருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதிலிருந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யாமல் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் அது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. மேலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி நிதித்துறை அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனை மாற்றி விட்டு புதிதாக தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கவும் வாய்ப்பு உள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் கயல்விழி நீக்கப்படலாம். ரகுபதி அல்லது மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு வாய்ப்பு உள்ளதாக தகவல். தங்க தென்னரசு வைத்திருக்கும் தொழில்துறை டி.ஆர்.பி.ராஜாவுக்கும் மனோ தங்க ராஜூக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக தமிழரசி விரைவில் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Tags :

Share via