அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

by Editor / 14-04-2025 12:29:23pm
அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
 

 

Tags :

Share via