ஆற்றில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு
 
 
                          
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கந்த்பால் நவ்காம் பகுதியில் நடந்த சம்பவத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணி தொடங்கப்பட்டு, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
Tags :



















