வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து

by Staff / 24-08-2024 04:50:26pm
வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு பகுதி ஆற்றங்கரை ஓரம் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து. தொழிலாளி கர்ணன் என்பவர் உடல் சிதைந்து தூக்கி வீசி எறியப்பட்டு உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆய்வு. இந்த வெடி விபத்தில் கர்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில் லட்சுமணன் கலியபெருமாள் ஆகியோர்  மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட உள்ளதாகவும், அரசு விதிமுறைக்கு உட்பட்டு கிடங்கு செயல்படுவதாக  உரிமையாளர் தரப்பில் கூறுகின்றனர். வெடி விபத்துக்கான தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo