5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

by Staff / 07-11-2023 11:55:46am
5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி மற்றும் அவரது மகன் கம்பனுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via