மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர்

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும்நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் நின்றது. இந்தநிலையில், மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற அவர், மழை பாதிப்பு, மழை நீர் அகற்றும் பணிகள் போன்ற நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Tags :