அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்

by Staff / 30-11-2023 02:00:51pm
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் (100) கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஹென்றி கிஸ்ஸிங்கர் பல சர்வதேச விவகாரங்களில் முக்கிய நபராக அறியப்படுகிறார். அவர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஹென்றி ரிச்சர்ட் நிக்சனின் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை செயலாளராகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். அவர் வெளியுறவுக் கொள்கையில் வலிமையானவராக அறியப்பட்டார். வியட்நாமுடனான அமைதி ஒப்பந்தத்திலும் ஹென்றி ஈடுபட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories