தங்கத்தின் விலை அசுரத்தனமாக உயர்ந்து கொண்டிருக்கிறது
உலக அளவில் தங்கத்தினுடைய மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. கச்சா எண்ணெய், பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக தினந்தோறும் தங்கத்தின் விலை அசுரத்தனமாக உயர்ந்து கொண்டிருக்கிறது .இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கு அளிக்கப்படும் சீதனங்களில் முதன்மையானதாக இருக்கும் தங்கம் நாளுக்கு நாள் இப்படி விலை ஏறிக் கொண்டிருப்பதை கண்டு சராசரியாக இருக்கக்கூடிய குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர் . தங்கம் அணிகலனாக மட்டுமின்றி நாட்டினுடைய பொருளாதார: ஸ்திரத்தன்மை யை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றதோடு குடும்பத்தின் தேவைக்கு பணத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய முதலீடாகவும் தங்கம் மாறிவிட்டதால் தங்கத்தின் தேவை அதிகரித்ததன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கின்றது . கடந்த ஒரு வாரம் தங்கத்தின் உடைய விலை எந்த அளவு உயர்ந்து இருக்கிறதை கீழே உள்ள பட்டியல் நமக்குத் தெளிவுப்படுத்தும்.
:
தேதி தூய தங்கம் (24 கி) நிலையான தங்கம் (22 கி)
1 கிராம் 8 கிராம் 1 கிராம் 8 கிராம்
5 /ஏப்ரல்/ 2023 6,167.00 49,336.00 5,690.00- 45,520.00
4 /ஏப்ரல்/ 2023 6,077.00 48,616.00 5,600.00 44,800.00
03 /ஏப்ரல்/ 2023 6,011.00 48,088.00 5,535.00 - 44, 280.00
02 /ஏப்ரல்/ 2023 6,014.00 48,112.00 5,560.00 - 44, 480.00
01/ ஏப்ரல் 2023 6,014.00 48,112.00 5,560.00 - 44, 480.00
31 /மார்ச்/ 2023 6,044.00 48,352.00 5,590.00 - 44, 720.00
Tags :