விரும்பிய தேதியில் சிசேரியன் முறை பிரசவம்.. இனி சாத்தியமில்லை.. மா.சுப்பிரமணியன் அடுத்த ஆக்சன்! 

by Admin / 28-06-2021 12:22:24am
விரும்பிய தேதியில் சிசேரியன் முறை பிரசவம்.. இனி சாத்தியமில்லை.. மா.சுப்பிரமணியன் அடுத்த ஆக்சன்! 

விரும்பிய தேதியில் சிசேரியன் முறை பிரசவம்.. இனி சாத்தியமில்லை.. மா.சுப்பிரமணியன் அடுத்த ஆக்சன்! 
 

விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தங்கள் நம்பிக்கைக்காக மகப்பேற்றினை மாற்றியமைக்க முயற்சிப்பது தவறானது என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

மூச்சுபயிற்சிஅப்போது அவர் பேசும் போது, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 5415 ஆக உள்ளது. தொற்று குறைந்தாலும் பரிசோதனையின் எண்ணிக்கை குறைக்க மாட்டோம். மேற்கு மாவட்டங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களுடம் ஆலோசனை நடைபெற்றது. மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுபயிற்சி அளிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதனால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.ஆபத்தானதுவிரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர் இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து, அவ்வாறான சிகிச்சையை அனுமதிக்க கூடாது என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தங்கள் நம்பிக்கைக்காக மகப்பேற்றினை மாற்றியமைக்க முயற்சிப்பது தவறானது என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும்.மாத்திரை சாப்பிட்டு பலிஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக கூறி 4 நபர்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துசேவை என்று அடையாளம் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம்.எடப்பாடிக்கு பதில்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு உண்டா இல்லையா என்று கேட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவு தேர்வு தடுக்கப்பட்டது.

அது போன்று தற்போது இயக்கிய ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு குறித்தான தாக்கத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம் குடியரசுத் தலைவர் அல்லது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும்.மாணவர்கள்ஒரு வேலை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் வந்து விட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. மூன்றாம் அலை வராமல் தடுக்க பணிகள் மேற்கொண்டுள்ளோம் ஒரு வேளை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஸ்டாலின்தற்போதைய சூழலில் வெளிச்சந்தையில் அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஜூலை மாத தொகுப்பில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக மத்திய அரசு உயர்த்தி தர உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தய சிகிச்சை வழங்க மருத்துவமனையை விரைவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார். கருப்பு பூஞ்சைக்காக தமிழகம் முழுவதும் 7000 படுக்கைகள் தயாராக உள்ளது- மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

 

Tags :

Share via