"தமிழ்நாட்டில் மேலும் 2 மாநகராட்சிகள்" அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 25-03-2025 04:23:39pm

தமிழ்நாட்டில் மேலும் 2 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது பதிலளித்த கே.என்.நேரு, "ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 27 ஆக உயரும்" என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via