மான் வேட்டையில் முக்கிய பிரமுகர்...? பரபரக்கும் தென்காசி மாவட்டம்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக மூன்று நபர்களை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.மான் வேட்டைக்கு உடன் சென்ற அரசியல் கட்சியின் முதன்மை அணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமறைவு என்றும் தகவல் வெளியானதால் பரபரப்பு உருவாகியுள்ளது.இது போன்று மான் வேட்டை சங்கரன்கோவில்-ஊத்துமலை பகுதியில் ஏற்கனவே நடந்துள்ளதாகவும் அப்போது பிடிபட்ட சிலர் முக்கிய பிரமுகரின் கணவர் என்பதால் வழக்கு பதியாமல் சிக்கியவர்களை மட்டும் அபராதம் விதித்து அனுப்பிவைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் மிக முக்கிய பிரமுகருக்கு வேண்டியவர் என்று அப்போது தப்பியதாகவும் கூறப்படுகிறது.எது எப்படியோ வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் சமூக காடுகள் நிரம்பிய பகுதிகளில் அதிகரித்துவருகின்றனர்.
Tags : மான் வேட்டையில் சிக்குவாரா முக்கிய பிரமுகர்?பரபரக்கும் தென்காசி மாவட்டம்.



















