சீன செயலிகளுக்கு தடை: அமெரிக்கா பாராட்டு
அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) TikTok மற்றும் பிற சீன செயலிகளை தடை செய்யும் இந்தியாவின் முடிவை பாராட்டியுள்ளது. இதேபோன்று டிக் டோக்கை தடை செய்யுமாறு அமெரிக்காவையும் FCC கேட்டுக் கொண்டது. டிக் டோக் தற்போது அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. டிக்டோக் மிகவும் சிக்கலான செயலி என்றும் FCC எச்சரித்துள்ளது.எஃப்.சி.சி தலைவர் பிரெண்டன் கார் எகனாமிக் டைம்ஸிடம், நாட்டின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் செயலித் தடை ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று கூறினார். டிக்டோக்கிலிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களை அச்சுறுத்தல், கண்காணிப்பு மற்றும் உளவு போன்றவற்றுக்கு சீனா பயன்படுத்தக்கூடும் என்று பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனின் மூத்த குடியரசுக் கட்சித் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
Tags :