திமுக, மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை காணவில்லை: ஆட்சியரிடம் மாமனார்புகார்
நெல்லை திமுக, மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை காணவில்லை என்று மாமனார் ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் துறையூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆர்.குழந்தை. இவரது மகளின் கணவர் மகேஷ்குமார். இவர் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக 2 ஆவது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்று உள்ளார்.
ஆனால் இன்னும் மாவட்ட ஊராட்சி குழு இந்நிலையில் மாவட்டக் கவுன்சிலர் மகேஷ்குமாரின் மாமனார் ஆர்.குழந்தை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 19 ஆம் தேதி முதல் தனது மருமகனை காணவில்லை என்றும், அவரை கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது மருமகனை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மருமகன் மகேஷ்குமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பயமாக இருப்பதாகவும், தனது மகனை கண்டுபிடித்து தருமாறும், மாவட்ட ஆட்சியரும் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
Tags :