திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6ஆம் நாள் விழா.தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

by Editor / 02-10-2022 09:45:44pm
திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6ஆம் நாள் விழா.தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6ஆம் நாள் விழா.

6ஆம் நாளான இன்று தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி  ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் 27ஆம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ராமர் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அதேபோல் மாலை தங்க  ரத உற்சவம்  நடைபெற்றது.பிரம்மோற்சவத்தின் 6ஆம்  நாளான இன்று இரவு தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி சர்வ திரு ஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதனை தொடர்ந்து 
ஜீயர்களின்  நாளஆயிரம் திவ்ய பிரபந்த ,கானம் அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் பாடி நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு நடுவே  வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.அப்போது நான்கு மாட வீதிகளில் இருபுறம் உள்ள பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா...  எனும் முழக்கத்துடன் ஹாரத்தி கொடுத்து வழிபட்டனர்.இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு ,ஆந்திரா , ராஜஸ்தான், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள்
 மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும்  நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நாளை காலை சூரிய பிரபா வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சியளிக்க உள்ளார்.

 

Tags :

Share via