எனக்கும் அந்த போஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” - அருள்மொழி

by Editor / 07-03-2025 02:28:22pm
எனக்கும் அந்த போஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” - அருள்மொழி

மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு பதில் நடிகர் சந்தானபாரதியின் போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி விளக்கமளித்துள்ளார். அரக்கோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அருள்மொழி, "அந்த போஸ்டரை நான் ஒட்டவில்லை. என் பெயரை Misuse செய்துள்ளனர். இதனால், நான் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். இதுகுறித்து காவல்துறையை அணுகி புகார் கொடுக்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via