மெட்டா என பெயரை மாற்றியது பேஸ்புக்... மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு...

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக்கின் பெயர், மெட்டா என மாற்றம் .
அடுத்தகட்டமாக மெட்டாவெர்ஸ் நோக்கி தம்முடைய கவனத்தை திசை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில் நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் பேசிய தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி அறிவித்துள்ளார்.
அதே சமயம் தங்களது செயலிகளும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Tags :