யூரோ கோப்பை டென்மார்க்கை வீழ்த்தி 55 ஆண்டுகளுக்கு  பிறகு இறுதிப் போட்டியில் புகுந்த  இங்கிலா

by Editor / 24-07-2021 04:31:14pm
யூரோ கோப்பை டென்மார்க்கை வீழ்த்தி 55 ஆண்டுகளுக்கு  பிறகு இறுதிப் போட்டியில் புகுந்த  இங்கிலா


யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.


ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று லண்டன் வெம்ளே மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, டென்மார்க்கை சந்தித்தது.ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும் மாறி மாறி பந்தைக் கடத்தி கோல் அடிக்க முயன்றனர். ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டாம்ஸ்கார்டுக்கு கிடைத்த ‘ப்ரீ கிக்’கை கோல் அடித்து அணியை 1- 0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.


இதையடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று இங்கிலாந்து அணியினர் தீவிரமாக ஆடினார்கள். அடுத்த 9-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் சிமன் ஜாயிர் சுய கோல் அடிக்க இங்கிலாந்து அணி 1 1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 1 என்ற கணக்கில் இருந்தன.


2-வது பாதியில் டென்மார்க் வீரர் ஜென்ஸன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்துக்கு அணியின் கோல் முயற்சிகளை அவர்கள் தடுத்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 -1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.


இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்டன் ஹாரி கேன் அருமையான கோலாக மாற்றினார். ஹாரி அடித்த ஷாட்டை டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷூமைக்கேல் தடுத்தபோதிலும் பந்து அவரின் கையில் பட்டு வெளியேறியது.அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹாரி, தனது வலது காலால் உதைத்து கோலாக்கினார்.இதையடுத்து இங்கிலாந்து அணி 2 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இத்தாலியுடன் மோதுகிறது.
1966-ம் ஆண்டு உலகக் கோப்பையைத் தவிர இங்கிலாந்து அணி பெரிதாக எந்தக் கோப்பையையும் பெறாத நிலையில் யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு 55 ஆண்டுகளுக்குப்பின் முன்னேறியுள்ளதால் அந்த அணி வெற்றி கோப்பையை பறிக்குமா என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கு முன் யூரோ கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி நான்கு முறை அரையிறுதி வரை முன்னேறி தோல்வி தழுவி உள்ளது.

 

Tags :

Share via